Home உலகம் எலிசபெத் ராணி இறுதிச் சடங்குகள் – உலகத் தலைவர்கள் குவிகின்றனர்

எலிசபெத் ராணி இறுதிச் சடங்குகள் – உலகத் தலைவர்கள் குவிகின்றனர்

682
0
SHARE
Ad

இலண்டன் : ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவரின் மறைவை முன்னிட்டு பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள உலகத் தலைவர்கள் இலண்டன் வரத் தொடங்கியுள்ளனர். ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு மட்டும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என ஊடகங்கள் தெரிவித்தன.

70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவரின் நல்லுடல் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ராணியின் உடலுக்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அதன் மூலம் பிரிட்டனின் பிரதமராகவும் பதவியேற்ற லிஸ் டிரஸ் எலிசபெத் ராணியாரைச் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சந்தித்தார். அதுவே எலிசபெத் இராணியாரின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது.