Home உலகம் எலிசபெத் ராணியார் காலமானார்

எலிசபெத் ராணியார் காலமானார்

531
0
SHARE
Ad

இலண்டன் : நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட 2-ஆம் எலிசபெத் இராணியார் தனது 96-வது வயதில் காலமானார். அவர் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 8) பிரிட்டிஷ் நேரப்படி மாலை 6.30 மணிக்குக் காலமானார் என அறிவிக்கப்பட்டது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் டிரஸ் எலிசபெத் ராணியாரைச் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சந்தித்தார். அதுவே எலிசபெத் இராணியாரின் கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது.

வழக்கத்திற்கு மாறாக லிஸ் டிரஸ்ஸை எலிசபெத் ராணியார் ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் அரண்மனையில் சந்தித்தார். வழக்கமாக அவர் பிரிட்டிஷ் பிரதமர்களை இலண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்து பதவி நியமனக் கடிதங்களை வழங்குவார்.

#TamilSchoolmychoice

1952-இல் சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது பிரிட்டனின் அரசியாகப் பதவியில் அமர்ந்தவர் எலிசபெத். அதன் பின்னர் இதுவரை, லிஸ் டிரஸ்ஸையும் சேர்த்து 16 பிரதமர்களோடு பணியாற்றியிருக்கிறார்.

முதன் முதலில் 1955-இல் அந்தோணி ஈடன் என்பவரைப் பிரதமராக ராணியார் நியமித்தார்.

எலிசபெத் இராணியாரின் மறைவுக்கு 10 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.