காபூல் – ரஷிய வருகையை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூர் வந்தடைந்துள்ளார்.
அவரை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி வரவேற்றார். ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை 90 மில்லியன் டாலர் செலவில் இந்திய அரசாங்கம் கட்டிக் கொடுத்துள்ளது. அந்தக் கட்டிடத்தை மோடி இன்று திறந்து வைப்பார். அந்தக் கட்டிடத்தின் ஒரு பிரிவுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்தும் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அதிபருடன் பேச்சு வார்த்தைகளிலும் மோடி இன்று ஈடுபடுவார். பின்னர் இன்று மாலையே புதுடில்லி திரும்புகின்றார்.
புதுடில்லி திரும்பியவுடன் நேராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இல்லம் சென்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க உள்ளார்.
இன்று வாஜ்பாயின் 91வது பிறந்த நாளாகும்.