Home Featured தமிழ் நாடு “அதிமுகவுடன் பாஜக கள்ளக்காதல்” – தொடரும் இளங்கோவனின் அநாகரிகப் பேச்சு!

“அதிமுகவுடன் பாஜக கள்ளக்காதல்” – தொடரும் இளங்கோவனின் அநாகரிகப் பேச்சு!

604
0
SHARE
Ad

evks-elangovanசென்னை – அதிமுக-பாஜக இடையே கள்ளக்காதல் உண்டு. தேர்தல் சமயங்களில் அது வெளிப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீண்டும் அநாகரிகமற்ற முறையில் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

கருணாநிதி, காங்கிரசிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தது குறித்து பேசுவதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த இளங்கோவன், “கருணாநிதி எங்களை கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது குறித்து சோனியாவை நான் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அப்போது எடுத்து கூறுவேன், சோனியா விருப்பப்படி நடக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “அதிமுக – பாஜக இடையே கள்ளக்காதல் உண்டு. அவர்கள் தேர்தல் நேரத்தில் சேருவார்கள்” என்று அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.