Home Featured நாடு “முட்டாள் தனமான பிரச்சனைகளுக்கு அதிக நேரத்தை வீணடிக்கின்றோம்” – கைரி

“முட்டாள் தனமான பிரச்சனைகளுக்கு அதிக நேரத்தை வீணடிக்கின்றோம்” – கைரி

734
0
SHARE
Ad

Khairyலங்காவி – லங்காவியில் நடைபெறும் இளைஞர் பாய்மர உலக சாம்பியன் போட்டியைக் காண அங்கு சென்றுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், சிலுவை விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட வீடமைப்புப் பகுதியைப் பார்வையிட்டுள்ளார்.

அந்த வீடமைப்புப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் புகைப்படம் எடுத்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கைரி, “லங்காவியில் ‘சிலுவை’ உள்ள வீடுகள். பிரச்சனைக்குப் பிறகு தற்போது வண்ணம் பூசப்படுகின்றன. நாம் முட்டாள் தனமான பிரச்சனைகளுக்கு அதிக அளவு நேரத்தை வீணடிக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் கடந்த வாரம் சர்ச்சைக்குள்ளான அந்த வீடுகளில் தற்போது சிலுவை போன்ற தோற்றமளிக்கும் காற்றுக்குழாய்களின் மேல் வண்ணம் பூசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.