Home Featured தமிழ் நாடு ஜெயாவை ஒருமையில் திட்டிய விஜயகாந்த் – தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

ஜெயாவை ஒருமையில் திட்டிய விஜயகாந்த் – தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு!

646
0
SHARE
Ad

vijayakanthசென்னை – டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கக் கோரி தேமுதிக சார்பாக தஞ்சையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் போது, விஜயகாந்த் மேடைக்கு எதிராக இருக்கும் நிழற்குடை ஒன்றில் ஜெயலலிதாவின் படம் இருந்தது. அப்போது விஜயகாந்த், ஜெயலலிதாவை ஒருமையில் திட்டி, அந்த பதாகையை கிழிக்குமாறு தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அதிமுக-தேமுதிகவினர் இடையே மிகப் பெரிய கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த், ஜெயலலிதாவை ஒருமையில் திட்டியதை தாங்க முடியாமல் அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அந்த தொண்டருக்கு என்ன ஆனது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

jayaஇதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.