Home Featured நாடு போலி மருத்துவச் சான்றிதழ் அளித்தால் 20 ஆண்டுகள் சிறை – ஊழல் தடுப்பு ஆணையம் சொல்கிறது!

போலி மருத்துவச் சான்றிதழ் அளித்தால் 20 ஆண்டுகள் சிறை – ஊழல் தடுப்பு ஆணையம் சொல்கிறது!

864
0
SHARE
Ad

MCகோலாலம்பூர் – பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவது சட்டப்படி மோசடிக் குற்றத்திற்கு ஈடானது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி-யின் சமுதாய கல்விப் பிரிவு அதிகாரி மொகமட் தார்மிஸ் அப்துல் மனாஃப் கூறுகையில், எம்ஏசிசி சட்டம் 2009, பிரிவு 18-ன் கீழ், போலியான தகவல்கள் கொண்ட ரசீது உட்பட ஆவணங்களை சமர்ப்பிப்பது மோசடிக் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடந்த திங்கட்கிழமை அவர் தனது வலைத்தளத்தில் எழுதியுள்ள தகவலில், “சாட்சி சான்றிதழ்களையும், மருத்துவச் சான்றிதழ்களையும் போலியாக சமர்ப்பிப்பது ஊழல் என்று உங்களுக்குத் தெரியுமா? போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது சட்டப்படி குற்றம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, எம்ஏசிசி துணை தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி கூறுகையில், போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார் என ஸ்டார் இணையதளம் தெரிவித்துள்ளது.