Home Featured நாடு 1எம்டிபி ஆதாரங்களை வால் ஸ்ட்ரீட் வெளியிட வேண்டும் – பிஏசி கூறுகின்றது!

1எம்டிபி ஆதாரங்களை வால் ஸ்ட்ரீட் வெளியிட வேண்டும் – பிஏசி கூறுகின்றது!

639
0
SHARE
Ad

WSJ 1MDBகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொதுக்கணக்குக் குழு (Public Accounts Committee), ‘த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிக்கையிடம் கூறுகின்றது.

“குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. உண்மைகளின் அடிப்படையில் கேள்விகளைத் தயாரித்து அவர்களைப் பின் தொடர முடியும்” என்று பொதுக்கணக்கு குழு துணைத் தலைவர் டாக்டர் டான் செங் கியாவ் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

‘த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிக்கையின் அண்மைய செய்தி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், டான் செங் கியாவ், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “அந்தச் செய்தியின் அடிப்படை ஆதாரம் பற்றி நமக்குத் தெரியாது, அப்படி இருக்கையில் எப்படி அவர்களைக் கேள்வி கேட்க முடியும்?” என்றும் டான் செங் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவர்களின் செய்திக்குப் பின் உள்ள அடிப்படை ஆதாரங்களை அவர்கள் வெளியிட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.