Home Featured தொழில் நுட்பம் விசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்!

விசாகப்பட்டினத்தில் மைக்ரோசாப்ட் சிறப்பு மையம் – நாதெல்லா ஒப்புதல்!

901
0
SHARE
Ad

nadella-ஐதராபாத் – பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து நட்பு பாராட்டி வந்ததன் விளைவாக மைக்ரோசாப்ட், கூகுள், சியாவுமி என பல்வேறு நிறுவனங்களும் தங்களது பார்வையை பெங்களூர், தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆந்திரா பக்கம் திருப்பி வருகின்றன.

ஏற்கனவே கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, பல கோடி ரூபாய் செலவில் ஐதராபாத்தில் கூகுள் மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், சமீபத்தில் சந்திர பாபுவுடனான சந்திப்பிற்கு பிறகு, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லாவும், விசாகப்பட்டினத்தில் சிறப்பு மையம் (Centre of Excellence) ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ள மைக்ரோசாப்ட், சிறப்பு மையம் அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், அம்மாநிலத்தின் கல்வி, விவசாயம் மற்றும் மக்களுக்கான சேவையில் மைக்ரோசாப்ட், தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு கட்ட வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.