Home Featured இந்தியா காங்கிரஸ் முன்னாள் அமைச்சருடன் நடிகர் சூர்யா சந்திப்பு!

காங்கிரஸ் முன்னாள் அமைச்சருடன் நடிகர் சூர்யா சந்திப்பு!

1200
0
SHARE
Ad

sasitharoorசென்னை – நடிகர் சூர்யா, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சருமான சசி தரூரை, தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும், அகரம் அறக்கட்டளை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சசி தரூர் தனது டுவிட்டர் வலைதளத்தில், சூர்யாவுடனான சந்திப்பைக் குறிப்பிட்டு அகரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து மாநாடு ஒன்றை நடத்த, சூர்யாவின் அகரம் அமைப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாட்டில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும், மீண்டும் இப்படி ஒரு சூழல் உருவாகாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நிபுணர்கள் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.