Home Featured கலையுலகம் சூர்யா-ஹரியின் இணையில் ‘சிங்கம்-3’ திரைப்படம் தொடங்கியது!

சூர்யா-ஹரியின் இணையில் ‘சிங்கம்-3’ திரைப்படம் தொடங்கியது!

926
0
SHARE
Ad

சென்னை – தென்னக சினிமா வட்டாரங்களில் அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான ‘சிங்கம்-3’ படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் வழக்கம்போல் சூர்யா கதாநாயகனாக நடிக்கின்றார்.

சூர்யாவின் அண்மையக் காலப் படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி வாகை சூடவில்லை. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘மாஸ் என்கிற மாசிலாமணி’, லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சான்’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெறாத நிலையில், ஒரு சூப்பர் ஹிட் படத்தை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் சூர்யா.

அவர் நடிப்பில் ஆகக் கடைசியாக வெளிவந்திருக்கும் படம் ‘பசங்க 2’. இதில் டாக்டர் தமிழ் நாடன் என்ற கதாபாத்திரத்தில், கௌரவ வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் சூர்யா.

#TamilSchoolmychoice

Surya-Singham 3 -

தற்போது இவர் நடித்து முடித்து வெளிவரத் தயாராகிக் கொண்டிருக்கும் படம் ’24’. பிரபல இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் இந்தப் படம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘பூஜை’ படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் இயக்குநர் ஹரியும் அடுத்து ஒரு வெற்றிப் படத்தைத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

இந்நிலையில் சூர்யாவும்-ஹரியும் இணைந்து, ஏற்கனவே தாங்கள் வெற்றிக் கொடி நாட்டிய சிங்கம் பட வரிசையை மீண்டும் கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சிங்கம் 3இன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இன்று முதல் சிங்கம்-3இன் படவேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் முதல் கட்ட தோற்றங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Singam3-poster