Home Featured நாடு பட்ஜட் 2016-ல் திருத்தம் – நஜிப் அறிவிப்பு!

பட்ஜட் 2016-ல் திருத்தம் – நஜிப் அறிவிப்பு!

713
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – 2016-ம் ஆண்டிற்கான நிதிஒதுக்கீட்டில் சில மாற்றங்களை செய்யவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் இன்று நிதியமைச்சு வளாகத்தில் கூடிய நிதியமைச்சரவையைச் சேர்ந்தவர்களுடனான சிறப்புக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

திடீர் பொருளாதார சரிவு காரணமாக, பட்ஜட் 2016-ல் இந்த திருத்தம் செய்யப்படுவதாக நஜிப் தெரிவித்துள்ளார்.

 

நீண்ட காலமாக இருந்து வரும் எண்ணெய் விலை சரிவை சுட்டிக் காட்டியுள்ள நஜிப், அது அரசாங்கத்தின் லாபத்தைப் பாதிப்பதாகவும், இந்த திருத்தம் செய்வதற்கான தீர்மானம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

எனினும், தற்போதைய பொருளாதார சூழலுக்குத் தகுந்தார் போல் இந்த மாற்றங்கள் இருக்கும் என்றும் அந்தக் கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி துணை நிதியமைச்சர் ஜோஹாரி அப்துல் கானி வெளியிட்ட அறிவிப்பில், எண்ணெய் விலையைக் குறைப்பதைத் தவிர பட்ஜட்டில் எந்த ஒரு திருத்தமும் கொண்டு வரப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.