அவர்களின் திருமண வரவேற்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு தலைநகரில் உள்ள கிராண்ட் ஹயாட் தங்கும் விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
8 ஆண்டுகளுக்கு முன்னர் ரோபர்ட்டோவை சந்தித்த கவிதா, அவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் புக்கெட்டிற்கு சுற்றுலா சென்ற போது, ரோபர்ட்டோ கவிதாவிடம் தனது காதலைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருமண வரவேற்பில் மலேசியாவின் முக்கியப் புள்ளிகளும், பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.