கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் இடையிலான அவதூறு வழக்கை, நடுநிலையாளர்கள் (Mediation) மூலம் தீர்க்க முயற்சி செய்யுமாறு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஒருவேளை நடுநிலை முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதாக நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ ஹபாரிசாம் ஹாரன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மேலாண்மை வரும் பிப்ரவரி 18- தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், மசீச தலைவருமான டாக்டர் லியோங் சிக், நஜிப் பற்றி வெளியிட்ட கருத்து ஒன்றில், மக்களின் பணத்தை எடுத்து, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நஜிப், லிங் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.