Home Featured நாடு “எனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு உண்டு; இனி கேள்வி எழுப்பாதீர்கள்” – நஜிப் திட்டவட்டம்!

“எனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு உண்டு; இனி கேள்வி எழுப்பாதீர்கள்” – நஜிப் திட்டவட்டம்!

510
0
SHARE
Ad

EPA/FAZRY ISMAIL

கோலாலம்பூர் – எனது தலைமைத்துவத்திற்கு ஆதரவு உள்ளதா என்பது குறித்து இனி யாரும் கேள்வி கேட்கத் தேவையில்லை, காரணம் நாடாளுமன்றத்தில் என் மீது நம்பிக்கை உள்ளது குறித்து ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய நஜிப், கடந்த ஆண்டு, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, 2016 -ம் ஆண்டிற்கான பட்ஜட் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, நாடாளுமன்றத்தில் பட்ஜட் தாக்கல் செய்யப்பட்ட போதே, இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது நிரூபிக்கப்பட்டுவிட்டது”

“நாம் இப்போது 2016-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். இனி அந்த நிலை குறித்து கேள்வி எழுப்ப முடியாது. நமது திட்டங்கள் மிகப் பெரியது, அது நமது நாட்டிற்கானது, மக்களுக்கானது, நம் அனைவரின் நன்மைக்கானது” என்று புத்ராஜெயாவில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.