Home Featured உலகம் விஷ்ணு கடவுள் குறித்து கேலி – ஃபார்ச்சூன் இதழ் வருத்தம்!

விஷ்ணு கடவுள் குறித்து கேலி – ஃபார்ச்சூன் இதழ் வருத்தம்!

832
0
SHARE
Ad

Bezos-Vishnu-நியூ யார்க் – உலகப் புகழ் பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் தலைவர் ஜெப் பெஜோசை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து அட்டைப் படம் வெளியிட்டு இருந்த பிரபல வர்த்தக இதழான பார்ச்சுனுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், தங்களின் செயலுக்கு பகிரங்க மன்னிப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-ம் தேதி வெளியான ஃபார்ச்சூன் இதழின் அட்டைப் படத்தில் ஜெப் பெஜோஸ் விஷ்ணுவாக சித்தரிக்கப்பட்டு இருந்ததற்கு உலகளாவிய இந்து சமூகத்தின் தலைவர் ராஜன் செட் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்து கடவுளர்களுள் அதிக மக்கள் வணங்கும் விஷ்ணுவை, அவமதிக்கும் நோக்கத்துடன் ஃபார்ச்சூன் அத்தகைய அட்டைப் படத்தை வெளியிட்டதாகக் அவர் கூறியிருந்தார்.

fortune-vishnu-avatarஇந்நிலையில், ஃபார்ச்சூன் இதழின் ஆசிரியர் ஆலன் முர்ரே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி மாதம் ஃபார்ச்சூன் இதழ் அட்டையில், அமசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெஜோசை ஒரு இந்துக் கடவுளாக சித்தரித்து படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த படத்தை வரைந்தவரோ, ஃபார்ச்சூன் இதழின் ஆசிரியர் குழுவோ எந்த ஒரு இந்துக் கடவுளையும் கேலி செய்யும் நோக்கத்திலோ, இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலோ இதைச் செய்வில்லை. இருப்பினும் நாங்கள் தவறு செய்துவிட்டோம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆலன் முர்ரேவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உலகளாவிய இந்து சமூக அமைப்பு, இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.