Home Featured உலகம் ஐஎஸ் இயக்கத்தின் புதிய தொலைத்தொடர்பு ஆயுதம் – ஒரு அண்டிரொய்டு செயலி!

ஐஎஸ் இயக்கத்தின் புதிய தொலைத்தொடர்பு ஆயுதம் – ஒரு அண்டிரொய்டு செயலி!

505
0
SHARE
Ad

ISISsடமாஸ்கஸ் – ஐஎஸ் இயக்கத்தின் தொலைத்தொடர்பு வழிகளை உலக நாடுகளும், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக உருவாக்கி உள்ள சைபர் இயக்கமும் முடக்கி வரும் நிலையில், யாராலும் முடக்க முடியாத எளிமையான அண்டிரொய்டு செயலி ஒன்றின் மூலம் அந்த இயக்கத்தினர் மிகச் சுலபமாக தொடர்பு கொண்டு வருவது தற்போது தெரிய வந்துள்ளது.

‘அல்ரவி’ (Alrawi) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த அண்டிரொய்டு செயலி மூலம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாதிகள் ஒருங்கிணைக்கப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. வாட்சாப் போன்று பயன்படுத்த எளிமையான அந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைப்பதில்லையாம். அந்த இயக்கத்தினருக்கு மட்டுமே தெரிந்த ‘ஆதாரம்’ (Source) ஒன்றின் மூலம் பதிவிறக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த செயலி தான் தற்போது உலக நாடுகளுக்கு மிகப் பெரும் தலைவலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.