கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை காலை கோலாலம்பூர் நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
இன்று காலை 10.18 மணியளவில் நூலகத்தில் தீ பற்றியது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அடுத்த 7 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் 10.49 மணியளவில் தீயை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் தீயணைப்புத்துறையின் மூத்த செயலாக்கப் பிரிவு கமாண்டர் அர்ம்டான் மகாட் தெரிவித்துள்ளார்.
ஹங்துவா, கேல்சிசி, செந்துல் மற்றும் தித்திவாங்சா ஆகிய பகுதிகளின் தீயணைப்பு வீரர்கள் 39 பேர் வரவழைக்கப்பட்டு தீ முற்றிலும் அழிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்து ஏற்படக் காரணம் அங்கு நடைபெற்ற வெல்டிங் பணி தான் எனத் தெரியவந்துள்ளது.
கோலாலம்பூர் நூலகம் டத்தாரான் மெர்டேக்காவில் அமைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும், நூல்கள் எரிந்தனவா என்பது பற்றி இன்னும் தகவல் வெளிவரவில்லை.