Home Featured உலகம் ஒபாமாவிற்கு எப்போதும் உற்சாகம் தரும் ஜெய் அனுமான்!

ஒபாமாவிற்கு எப்போதும் உற்சாகம் தரும் ஜெய் அனுமான்!

831
0
SHARE
Ad

obama hanumanவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் ஒபாமாவை சமீபத்தில் யூ-டியூப் வலைத்தள நட்சத்திரமான இன்கிரிட் நீல்சன் வெள்ளை மாளிகையில் வைத்து பேட்டி எடுத்தார். அப்போது நீல்சன் சுவாரசியமான கேள்வி ஒன்றை ஒபாமாவிடம் எழுப்பினார்.

அவர், “உங்களின் கோட் பைக்குள் மனதிற்கு நெருக்கமான என்னென்ன பொருட்களை வைத்திருப்பீர்கள்” என்று கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காத ஒபாமா, தனது கோட் பைக்குள் கையைவிட்டு, சிறிய புத்தர் சிலை, வெள்ளிப் பதக்கம் போன்றவற்றை எடுத்துக் காட்டினார். அப்போது அவர், ஆச்சரியப்படும் விதமாக காட்டிய மற்றொரு சிலை, சிறிய அளவிலான அனுமான் சிலை தான்.

obama“இதை எனக்கு ஒரு பெண் கொடுத்தார். இந்த பொருட்களை எடுத்துச் செல்வதால் நான் மூடநம்பிக்கை கொண்டதாகக் கூறிவிட முடியாது. ஆனால், நான் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ, தன்னம்பிக்கை குறைந்ததாக நினைக்கிறேனோ? அப்போதெல்லாம் எனது பாக்கெட்டை பார்த்து என்னால் இந்த பிரச்சனையை சமாளித்து மீண்டு வர முடியும் என சொல்லிக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.