Home Featured கலையுலகம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த மாதவன்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த மாதவன்!

787
0
SHARE
Ad

kushbu1சென்னை – தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவிற்கு, நடிகர் மாதவன் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

குஷ்பு நடத்தி வரும் தொலைக்காட்சித் தொடருக்காக சமீபத்தில் நடிகர் மாதவன் விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் அந்தத் தொடர் குறித்த, விளம்பரக் காணொளி ஒன்றை, சமீபத்தில் குஷ்பு தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பதிவில், “இந்த ப்ரோமோ (விளம்பரம்)வைப் பார்த்த பிறகு, அனைத்து பெண்களும் பொறாமைப்படப் போகிறார்கள்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

#TamilSchoolmychoice

அவரின் அந்த காணொளியில், நடிகர் மாதவன் புகழ்பெற்ற அலைபாயுதே உரையாடலைக் கூறி, ‘நச்’  என குஷ்புவிற்கு முத்தம் கொடுத்துவிடுகிறார். இது போதாதா, ஏற்கனவே குஷ்புவின் உடை அலங்காரத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சித்து வந்த கலாச்சார காவலர்கள், தற்போது மேற்கூறிய நிகழ்ச்சிக்காக குஷ்புவையும், மாதவனையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொலைக்காட்சிகளில் முகம் சுளிக்கும் படியான நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த தணிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.