கோலாலம்பூர் – உலகம் மிகப் பெரும் பேரிடரைச் சந்திக்க இருப்பதாக இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹாக்கிங்கிடம் பூமி இயற்கையாக அழியுமா? அல்லது மனித குலத்தால் அழிவை சந்திக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நாம் மிக அதிகமான ஆபத்துகளை சந்தித்து வருகிறோம். அணு ஆயுப் போர், உலக வெப்பமயமாதல் மற்றும் மரபணு வைரஸ்கள் போன்றவை உலகை அழிக்கக் காத்திருக்கின்றன. பூமியின் அழிவு தீர்மானிக்கப்பட்டதாக இருந்தாலும், அந்த அழிவு மிக நெருக்கமாக உள்ளதாகவே நான் கருதுகிறேன். அடுத்த ஆயிரம் வருடங்களிலோ அல்லது பத்தாயிரம் வருடங்களிலோ அந்த அழிவு ஏற்படலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.