Home உலகம் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

1219
0
SHARE
Ad

லண்டன் – இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) இன்று புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

தனது 21-வது வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து அதற்கான சிகிச்சைகள் எடுத்து வந்ததோடு, இயற்பியலில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.

குவாண்டம் கோட்பாடு, அண்டவியல்,கடவுளின் துகள் ஆகியவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து புத்தகங்கள் எழுதிய ஸ்டீபன் அது குறித்து உலக விஞ்ஞானிகளுக்கு நிறைய எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நான் பிறருக்குப் பாரமாகும் போது மரணிப்பேன் என ஸ்டீபன் ஒருமுறை உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரது மறைவை அறிந்து உலக விஞ்ஞானிகள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.