Home உலகம் “நான் பிறருக்கு பாரமாகும்பொழுது மரணிப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங் உருக்கம்!

“நான் பிறருக்கு பாரமாகும்பொழுது மரணிப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங் உருக்கம்!

929
0
SHARE
Ad

Stephen-Hawkingலண்டன், ஜூன் 4 – “நான், என்று பிறருக்கு பாரமாகிறேனோ அன்று எனது மரணம் பற்றிய இறுதி முடிவை எடுப்பேன்” என இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.

பிபிசி தொலைக்காட்சிக்காக  ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் அளித்த பேட்டி பற்றிய உருக வைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 21-வயதில் ஹாக்கிங் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அந்த நரம்பியல் நோய் அவரை முற்றிலும் முடக்கிப்போட்டது. எனினும் மனம் தளராத ஹாக்கிங், இயற்பியலுக்கும், பிரபஞ்சம் தொடர்பான அறிவியலிலுக்கும் மிகப் பெரிய அளவில் பங்காற்றி உள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிபிசிக்கான அவரது பேட்டி பற்றிய தகவல்கள் அவரது மாணவர்களுக்கும், உலக அறிவியலாளர்களுக்கும் மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 73 வயதான ஹாக்கிங் தனது மரணம் குறித்து கூறியுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“நான் பிறருக்கு பாரமாக இருப்பது போல் உணர்ந்தாலோ அல்லது என்னால் இனி உபயோகமில்லை என்ற நிலை வரும்போதோ, மற்றவர்களின் உதவியுடன் எனது மரணத்தை உறுதி செய்வேன். இப்போதெல்லாம் பல நேரங்களில் நான் தனிமையில் உள்ளதைப் போல உணர்கிறேன். அதற்கு எனது உடல் நிலையும் ஒரு காரணம்.”

“என்னால் சுயமாக தற்கொலை செய்து கொள்ள முடியாது. என்னை போன்று முற்றிலும் செயல் இழந்து உயிரை கூட மாய்த்துக் கொள்ள முடியாதவர்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும். இந்த உரிமையை மறுப்பது சரியாகாது. அப்படி செய்வது என்னைப் போன்றவர்களுக்கு செய்யும் அநீதி ஆகும்.”

“எனினும், இப்போதே எனது மரணத்தை தொடங்குவதற்கான திட்டம் என்னிடம் இல்லை. இந்த பிரபஞ்சம் பற்றிய சில ஆச்சரியங்களை அறிந்து கொள்ள வேண்டி உள்ளது. அது வரை மரணம் பற்றி சிந்திக்க வில்லை” என்று கூறியுள்ளார்.

தனது குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியாது போனது பற்றி அவர் கூறுகையில், “மற்ற அப்பாக்களைப் போல் என்னால் என் குழந்தைகளுடன் ஓடி விளையாட முடியவில்லை. நான் அந்த விளையாட்டுத் தனத்தை இழந்து விட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பிபிசிக்காக ஹாக்கிங் அளித்துள்ள பேட்டி வரும் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.