Home Featured இந்தியா தலித் மாணவர் தற்கொலையில் பல உண்மைகள் மறைந்துள்ளன – ஸ்மிருதி இரானி பகிரங்கக் குற்றச்சாட்டு!

தலித் மாணவர் தற்கொலையில் பல உண்மைகள் மறைந்துள்ளன – ஸ்மிருதி இரானி பகிரங்கக் குற்றச்சாட்டு!

647
0
SHARE
Ad

rohithபுது டெல்லி – ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், சாதிய பிரச்சனையால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்குப் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என  கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஸ்மிருதி இரானி முதல்முறையாக வாய்திறந்துள்ளார். அவரின் அறிக்கையில், “இந்த விவகாரத்தை தலித் மாணவர் தற்கொலை என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் அணுகிவரும் நிலையில், அவ்வாறான போக்கு சரியில்லை. உண்மைகள் திரித்து வெளியாகி வருகின்றன. வெமுலா தற்கொலை செய்துகொண்டதாக மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.