Home இந்தியா இந்தியா வந்தடைந்தார் இவாங்கா டிரம்ப்!

இந்தியா வந்தடைந்தார் இவாங்கா டிரம்ப்!

1122
0
SHARE
Ad

Ivanka Trump1ஐதராபாத் – தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், ஐதராபாத் வந்தடைந்தார்.

ஐதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வந்தடைந்த, அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இவாங்காவுடன் அமெரிக்காவில் இருந்து பேராளர்களும் வந்திருக்கின்றனர்.

Ivanka Trumpஇதனையடுத்து, நிஜாம் அரண்மனையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அவர்களுக்கு மாபெரும் விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

அவ்விருந்து உபசரிப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.

கடந்த ஜூன் மாதம் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கும் படி இவாங்காவிற்கு மோடி அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.