Home கலை உலகம் அன்புச்செழியனுக்கு எதிரான புகார் வாபஸ்!

அன்புச்செழியனுக்கு எதிரான புகார் வாபஸ்!

842
0
SHARE
Ad

Anbuchezhiyanசென்னை – நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டிக் கொடுமையால் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கந்துவட்டிக்காரர் அன்புச்செழியன் மீது சசிகுமார் தரப்பு காவல்துறையில் புகார் அளித்திருந்தது.

இதனிடையே, திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் சி.வி.குமாரும், அன்புச்செழியன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தான் இயக்கியிருக்கும், ‘மாயவன்’ திரைப்படத்தை வெளியிட அன்புச்செழியனின் கோபுரம் நிறுவனத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் என்றும், தன்னுடைய நிதி ஆவணங்களையும் பெற்றுத் தர வேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் கேட்ட ஆவணங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டதையடுத்து சி.வி.குமார், அன்புச்செழியன் மீதான புகாரை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகின்றது.