Home One Line P2 ‘வெல்வோம்’: குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம்!

‘வெல்வோம்’: குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம்!

843
0
SHARE
Ad

சென்னை: மதுரை நகர காவல்துறை சார்பில் கடந்த புதன்கிழமைவெல்வோம்என்ற குறும்படம் வெளியிடப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த இளைஞர்களால் இந்த குறும்படம் படமாக்கப்பட்டுள்ளது. குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மூன்று நிமிடத்திற்கு இந்த குறும்படத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இது சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை காவல் துறைத் தலைவர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் கல்லூரி மாணவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் அமெரிக்கன் கல்லூரியில் இப்படத்தை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த படம் சங்கிலி பறித்தல், பெண்கள் துன்புறுத்தல், கொலை மற்றும் தற்கொலை போன்ற பல்வேறு குற்றங்களை பதிவு செய்துள்ளது. காவலன்பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வையும் இது உருவாக்குகிறது. இதன் மூலம் ஒருவர் குற்றச் சம்பவத்திலிருந்து ஆபத்து சமிக்ஞையை அனுப்ப முடியும். சில நிமிடங்களில் காவல்துறையினர் அந்த இடத்தை அடைவார்கள்.

மதுரையைச் சேர்ந்த இரண்டு பிரபல திரைப்பட பிரமுகர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் இப்படத்திற்கு தங்கள் நேரத்தையும் முயற்சியையும் வழங்கியுள்ளனர்.

ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு காவல் துறையின் உதவியை நாட வேண்டும் என்றும், சுருக்கமான காட்சிகளில், குற்றங்களைத் தடுக்க நகர காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பரவலாகப் பகிரப்படும் இப்படத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்: