Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- கிட் சியாங்

நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- கிட் சியாங்

971
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கடுமையாக உழைத்து 14-வது பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறு ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் அதிர்ச்சியூட்டும் முடிவுகளுக்குப் பிறகு நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணைக் கால அரசாக மாறாமல் இருக்க இது அவசியம் என்று அவர் கூறினார்.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் 2023-இல் நடைபெற இருக்கும் 15-வது பொதுத் தேர்தலின் அளவுகோலாக இருந்தால், நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஒரு தவணைக் கால அரசாக இருக்கும். அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவிலிருந்து வெளியேற்றப்படும்என்று அவர் தெரிவித்தார்.