கோலாலம்பூர்: மலேசியா– தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் காவல் துறை உறுப்பினர்கள், கையூட்டு பெறுவது அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டால், கிளந்தான் காவல்துறை அவர்களுடன் சமரசம் செய்யாது என்று அதன் தலைவர் டத்தோ ஹாசானுடின் ஹசான் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகள் விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் மற்றும் தற்போதுள்ள சட்டங்கள் (ஊழல் குறித்து) அறிந்திருப்பதால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
“கடத்தல், ஊழல், பிற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படாது.” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீபா கோயா, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நாட்டின் எல்லை கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான காணொளிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.