Home வணிகம்/தொழில் நுட்பம் தற்கொலைகளைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பம் – ஃபேஸ்புக் அறிமுகம்

தற்கொலைகளைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பம் – ஃபேஸ்புக் அறிமுகம்

818
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ – ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொள்வது அண்மையக் காலமாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அது போல் தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதியத் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது.

அமெரிக்காவில் இதனைக் கடந்த மார்ச் மாதம் வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்ததையடுத்து மிக விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யவிருக்கிறது.

தற்கொலை மனநிலையோடு ஃபேஸ்புக்கில் வருபவர்களை “உங்களுக்கு ஏதும் பிரச்சினையா?”, “உதவி வேண்டுமா?” போன்ற கேள்விகளை ஃபேஸ்புக் கேட்கும் என்றும், அப்படி சந்தேகம் வரும் பட்சத்தில் உடனடியாக அவர்களது நெருங்கிய நண்பர்களுக்குத் தெரிவிக்கும் என்றும் ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice