Home நாடு ஜோங் நம் மரண விசாரணை: நச்சு பாதிப்பால் உள்ளாடையில் காணப்பட்ட கழிவு!

ஜோங் நம் மரண விசாரணை: நச்சு பாதிப்பால் உள்ளாடையில் காணப்பட்ட கழிவு!

822
0
SHARE
Ad

kimjongnamகோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இரசாயனம் தெளித்துக் கொல்லப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இவ்வழக்கு விசாரணையில் நேற்று திங்கட்கிழமை, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் தடவியல் ஆலோசகர், நோயியல் நிபுணரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவர் நூருலிசா அப்துல்லா (வயது 52) நீதிமன்றத்தில் கூறுகையில், “ஜோங் நம்மின் பிரேதப் பரிசோதனையின் படி, அவரது உள்ளாடையில் மலம் இருந்திருக்கிறது. உடலில் உள்ள விஷம் காரணமாகத் தான் அப்படி ஒரு நிலை ஏற்படும்.”

#TamilSchoolmychoice

“பூச்சிக்கொல்லி அல்லது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் இரசாயனத்தால் ஒருவருக்கு இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும். காரணம், நச்சு அவரது தசைகளில் பக்கவாதத்தை ஏற்படுத்தி, கட்டுப்பாடின்றி மலத்தை வெளியேற்றும்” என நூருலிசா நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.