Home One Line P2 “39 வயதான வேணு மாதவன் காலமானது வருத்தத்திற்குரியது”- திரையுலகம் அஞ்சலி

“39 வயதான வேணு மாதவன் காலமானது வருத்தத்திற்குரியது”- திரையுலகம் அஞ்சலி

1150
0
SHARE
Ad

ஐதரபாத்: தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நகைச்சுவை நடிகரான வேணு மாதவன் (39) நேற்று புதன்கிழமை கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1996-இல்சம்பிரதாயம்என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய வேணு மாதவன், இதுவரையிலும், சுமார் 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில்,  காதல் சுகமானது‘, ‘என்னவளேஉள்ளிட்டபடங்களிலும் அவர்நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். மேலும், அவர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 24-ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் காலமனானார்.

இதனிடையே, அவரது இந்த பிரிவு தங்களை பெரிதும் பாதித்துள்ளதாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக கலைஞர்கள் சமூகப்பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.