Home One Line P2 காஷ்மீர்: இறங்கி வராத இந்தியா, ஐநா சபையில் போர் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

காஷ்மீர்: இறங்கி வராத இந்தியா, ஐநா சபையில் போர் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

1581
0
SHARE
Ad

புது டில்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் மீண்டும் நடுவராக இருந்து தீர்த்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்திருந்தது.

ஐநா சபை கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக பேசிய டிரம்ப், இந்த விவகாரத்தில் தமது உதவியை இரு நாடுகளும் விரும்பும் என்று கருதுவதாகத் தெரிவித்திருந்தார். இரு நாடுகளும் விரும்பினால் அமெரிக்கா நடுவராக இருந்து செயல்படும் என்று அவர் கூறியிருந்தார்.  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசிய 24 மணி நேரத்திற்குள்ளாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இவ்வாறான கருத்தை கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

#TamilSchoolmychoice

காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தளவில் அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்றும், இதில் வெளிநாடுகள் தலையிட தேவையில்லை என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநா சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் இந்த முடிவினால் அங்கு இனப்படுகொலைகள் நடக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்ந்தால், அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இவ்விரு நாடுகளும் போரில் சந்திக்கும் நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.