Home One Line P1 அனைத்து பகுதிகளிலும் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது!

அனைத்து பகுதிகளிலும் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது!

852
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: தீபகற்பம், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மேன்மையடைந்துள்ளது. 100-க்கும் குறைவான காற்று மாசுபாடு குறியீடு (ஏபிஐ) பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 66 பகுதிகளில் மிதமான காற்றின் தரம் இருந்துள்ளதை அது தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதே நேரத்தில் பெசூட், திரெங்கானு மற்றும் தஞ்சோங் மாலிம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜோஹான் செத்தியாவில், நேற்று வரை, ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவு செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு 89 (மிதமான) குறியீட்டை அப்பகுதி பதிவு செய்துள்ளது. செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் தொடங்கிய இடைக்கால பருவமழை கட்டத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக நாட்டைத் தாக்கிய புகை மூட்டம் படிப்படியாக மீட்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை முன்பு கணித்திருந்தது.