Home இந்தியா மதுபான விடுதியில் நுழைய ஆதார் அவசியம் – ஐதராபாத் கெடுபிடி!

மதுபான விடுதியில் நுழைய ஆதார் அவசியம் – ஐதராபாத் கெடுபிடி!

826
0
SHARE
Ad

Pubஐதராபாத் – ஐதராபாத்தில் உள்ள பப் எனப்படும் மதுபான கேளிக்கை மையங்களில் நுழைய வேண்டுமானால் ஆதார் அட்டையை அவசியம் காட்ட வேண்டும் என அம்மாநில காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது.

அண்மையில், போதைப் பொருள் விவகாரத்தில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் காவல்துறையில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாங்கள் வழக்கமாகச் செல்லும் பப்களிலேயே மதுபானத்துடன் போதைப்பொருள் விற்பனை செய்வதாக வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து, பப்களில் கெடுபிடியை அதிகப்படுத்திய ஐதராபாத் காவல்துறை, ஆதார் அட்டையைக் காட்டுவதன் மூலம் பப்களில் 21 வயதான நபர் மட்டுமே நுழைய முடியும் என்பதோடு, பப்பில் நுழையும் ஒவ்வொரு தனிநபரின் விவரங்களையும் பப் உரிமையாளர்கள் பாதுகாத்து வைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.