சென்னை – நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் “24” என்ற புதுமையான பெயர் கொண்ட படம் தமிழக சினிமா வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெளியிடப்பட்ட சூர்யாவின் அட்டகாசமான வித்தியாசத் தோற்றங்களைத் தாங்கிய படங்கள் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.
அஞ்சான், மாஸ் என வரிசையாக தனது கடந்த இரண்டு படங்களும் சரியாக வசூல் ரீதியாக வெற்றியடையாத காரணத்தால், அடுத்த படமான 24 படத்தை சூர்யா மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதாலும், படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், மலேசியத் தணிக்கை வாரியம் “24” என்ற பெயரோடு படத்தை வெளியிட அனுமதிக்குமா – அல்லது காவல் துறையும் இதற்கு அனுமதி தருமா – இல்லாவிட்டால், தமிழ்ப் படம்தானே என்ற காரணத்தால் அதே பெயரோடு படத்தை வெளியிட மலேசிய அதிகாரிகள் முடிவு செய்வார்களா – என்பது போகப் போகத்தான் தெரியும்.