விமானம் மூலம் சண்டிகர் வந்தடைந்த அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் மோடியும், ஹாலன்டேவை வரவேற்க சண்டிகர் வந்தடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
பிரான்ஸ் அதிபரின் வருகை குறித்து மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை வரவேற்கிறேன். குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபருக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஐஎஸ் இயக்கத்தினரால் அச்சுறுத்தல் இருப்பதால், முக்கிய நகரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments