Home Featured தமிழ் நாடு பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டது – நடப்பது காட்டாட்சி என விமர்சனம்!

பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டது – நடப்பது காட்டாட்சி என விமர்சனம்!

746
0
SHARE
Ad

pazhakarupaiyaசென்னை – அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் நேற்று இரவு கல்வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பழ.கருப்பையா. ஆளும் அரசு குறித்தும் அமைச்சர்கள் குறித்து சமீபத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கடந்த புதன்கிழமை இரவு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் கருப்பையா தனது விமர்சனங்களை நிறுத்தவில்லை. இந்நிலையில் தான் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தத் தாக்குதல் நான் எதிர்பார்த்த ஒன்று தான். நடப்பது காட்டாட்சி என்றே தோன்றுகிறது” என்று விமர்சித்துள்ளார்.