Home Featured கலையுலகம் “என் வாழ்க்கை காதல் கவிதை அல்ல” – கவிஞர் தாமரை உருக்கம்!

“என் வாழ்க்கை காதல் கவிதை அல்ல” – கவிஞர் தாமரை உருக்கம்!

2504
0
SHARE
Ad

Thamaraiசென்னை – சமீபத்தில் பட்டி தொட்டி எங்கும் இளைஞர்களை கட்டிப் போட்டுவிட்ட ஒரு பாடல் என்றால் அது ‘தள்ளிப் போகாதே’ பாடல் தான். இரு சக்கர வாகனங்களில் போகும் இளசுகளின் ஒற்றை முணுமுணுப்பாய் இந்த பாடல் இருக்கிறது என்றால் அதற்கு காரணமானவர்கள் இருவர். ஒருவர், இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் மற்றொருவர் கவிஞர் தாமரை.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பாடல் குறித்து, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தாமரை பேட்டி அளித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில், தன் தனிப்பட்ட வாழ்க்கை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த தருணத்திலும், ‘தள்ளிப் போகாதே’ போன்ற காதல் பாடல்களை எழுத வேண்டி இருப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்தப் பேட்டியில் ‘தள்ளிப் போகாதே’ பாடல் உருவான விதம் குறித்து கூறுகையில், “ரஹ்மான் உருவாக்கிய மெட்டை முதலில் கேட்டவுடன் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழம்பிப் போனேன். இந்த மெட்டிற்கு மிக வித்தியாசமாக பாடல் எழுதும் படி ரஹ்மான் கேட்டுக் கொண்டதாக கௌதம் என்னிடம் கூறினார். அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது.”

#TamilSchoolmychoice

“அதன் பிறகு நான் புரிந்து கொண்டேன், இது வழக்கமான பாடல் அல்ல என்று. சிறு சிறு கவிதைகளாக முதலில் எழுதி இந்த பாடலை உருவாக்கினோம். ரஹ்மானின் இசை எப்போதும் யூகிக்க முடியாதவையாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

thalliதள்ளிப்போகாதே பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கும் இந்த சூழலில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்விக்கு, “என் வாழ்க்கை ஒன்றும் காதல் கவிதை அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமான கட்டத்தில் இருக்கும் இந்த சமயத்திலும் ‘தள்ளிப் போகாதே’ போன்று காதல் பாடல்களை நான் எழுதியாக வேண்டி இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் தாமரையின் கணவர் தியாகு, ‘தாமரையுடன் வாழ விரும்பவில்லை’ என பகிரங்கமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.