Home Featured நாடு ஒரு எலிக்கு 3 ரிங்கிட் சன்மானம் – பெட்டாலிங் ஜெயா நகர சபை அறிவிப்பு!

ஒரு எலிக்கு 3 ரிங்கிட் சன்மானம் – பெட்டாலிங் ஜெயா நகர சபை அறிவிப்பு!

1114
0
SHARE
Ad

Waterfall_ratபெட்டாலிங் ஜெயா – அடுத்த வாரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு எலி பிடிக்கும் பிரச்சாரம் ஒன்றை பெட்டாலிங் ஜெயா நகர சபை நடத்தவுள்ளது.

அதாவது, பெட்டாலிங் ஜெயா ஓல்ட் டவுன் அல்லது செக்‌ஷன் 17 இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் உள்ள எலியை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பிடித்துக் கொடுத்தால், எலிக்கு தலா 3 ரிங்கிட் வழங்குவதாக அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் எந்த ஒரு பகுதியில், ஒரு எலிக்கு 3 ரிங்கிட் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அந்தப் பகுதியிலுள்ள மொத்த விற்பனை மையங்கள் மற்றும் உணவுக்கடைகளில் இருந்து வீடுகளுக்குள் எலிகள் வந்து தொல்லை தருவதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பலர் புகார்கள் அளிக்கத் தொடங்கியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எலிக்கு 3 ரிங்கிட் என 3000 ரிங்கிட் வரையில் கூட சன்மானம் வழங்கத் தான் தயாராக இருப்பதாக புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜிவ் அறிவித்துள்ளார்.