பெட்டாலிங் ஜெயா – நேற்று தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில், பெட்ரோல் குண்டை வீசி எறிந்து 6 கார்கள் தீக்கிரையான சம்பவத்திற்குக் காரணம் என சந்தேசிக்கப்படும் நபர், இன்று பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அவரை 4 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் பிரிவு 435-ன் கீழ், வெடிப் பொருட்களைத் தவறான வழியில் பயன்படுத்தியது தொடர்பில், துணைப் பதிவாளர் மஸ்ரா மொகமட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்ட அந்நபர், தனது மனைவியுடன் விவாகரத்தை எதிர்நோக்கியிருக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று, தனது மனைவியையும் அவரது புதிய காதலரையும் கண்ட அவர், மனைவியின் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியதால், அந்தக் கார் முற்றிலும் எரிந்ததோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களும் தீக்கிரையாகியுள்ளதாக விசாரணைக்குப் பிறகு காவல்துறை அறிவித்துள்ளது.