கோலாலம்பூர்: பெட்டாலிங் ஜெயாவில் மூடப்பட்ட ஜாலான் ஓத்மான் சந்தையில் எலிகளின் அராஜகம் தலைத்தூக்கியுள்ளது.
அந்த சந்தையில் ஐந்து நேர்மறை கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்ட பின்னர், மே 3 முதல் இந்த வளாகம் மூடப்பட்டது.
ஸ்டார் மெட்ரோ ஊடகம் நேற்று இச்சந்தைக்குச் சென்றபோது, சுமார் 50 எலிகள் உணவு தேடுவதைப் பார்க்க முடிந்ததாகக் கூறியது.
கடந்த இரண்டு மாதங்களில் எலிகள் பிரச்சனை மோசமடைந்துள்ளதாக குடியிருப்பாளர் கிளெட்டஸ் ஸ்டீபன்சன் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றம் எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
“சில எலிகள் பூனைகளின் அளவு, இங்கே நிறைய உள்ளன” என்று ஸ்டீபன்சன் கூறினார்.
“நகராட்சி மன்றம் ஏதாவது செய்ய என்னால் இயன்ற எல்லா வழிகளிலும் சொல்லிவிட்டேன். நான் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளேன், தொலைபேசி அழைப்புகள் கூட செய்தேன், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை, ” என்று அவர் கூறினார்.
கொவிட்19 உடன் போராடும் இக்காலக்கட்டத்தில், எலிகள் புதிதாக நோய்களைக் கொண்டு செல்லக்கூடியதாக இருப்பதால், அவற்றை அழிப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஸ்டீபன்சன் கூறினார்.
“உணவு விற்கப்படும் சந்தைகளில் அவற்றை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் கூறினார்.
வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்ய சந்தை வணிகர்ளை பெட்டாலிங் ஜெயா நடராட்சி மன்றம் கட்டாயப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“நான் இதைப் பின்தொடரப் போகிறேன், ஏனென்றால் இது ஒரு தீவிரமான விஷயம், மேலும் தூய்மையான சூழலுக்கு பொதுமக்கள் கோர வேண்டும்,” என்று அவர் கூறினார்.