Home Featured உலகம் இந்தோனேசியாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்!

இந்தோனேசியாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்!

651
0
SHARE
Ad

isisசிட்னி – உலக அளவில் இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்ட நாடான இந்தோனேசியாவை தங்களின் ‘தொலைதூர கலிபகம்’ (distant caliphate) ஆக மாற்றும் முயற்சியில், ஐஎஸ் இயக்கம் தீவிரம் காட்டி வருவதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய சட்டத்துறையின் முக்கிய பொறுப்பாளர் ஜார்ஜ் ப்ராண்டிஸ் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இந்தோனேசியாவில் தங்களின் தடத்தை பதிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் நேரடியாகவோ அல்லது தங்களின் கைக்கூலிகள் மூலமாகவோ இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்”

“மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி தனது இருப்பை அதிகரிக்க ஐஎஸ் இயக்கம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அவர்கள் இந்தோனேசியாவை குறி வைத்துள்ளனர். இந்த தகவல்களை நாங்கள் இந்தோனேசிய உளவுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே இந்தோனேசியாவில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் நடமாட்டம் பெருகி வருவதை ஒப்புக் கொண்டுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், வணிக வளாகங்கள், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.