Home Featured உலகம் தாய்லாந்து விபத்து: பலியான 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று ஜோகூர் கொண்டு வரப்படும்!

தாய்லாந்து விபத்து: பலியான 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று ஜோகூர் கொண்டு வரப்படும்!

720
0
SHARE
Ad

 

crash-bus-siteசியங்மாய் – தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 13 மலேசியர்களின் சடலங்கள் இன்று பிற்பகலில் மலேசியாவிற்குக் கொண்டு வரப்படவுள்ளன.

இறந்தவர்களின் உறவினர்களிடம் தாய்லாந்து அதிகாரிகள் தேவையான தகவல்களைப் பெற்று விட்டு இன்றே மலேசியாவிற்கு அனுப்பி வைப்பார்கள் என அங்கிருக்கும் மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இறந்த 13 பேரும் ஜோகூர் பத்து பகாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மலேசியா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு ஹெர்குலஸ் சி130 விமானங்களில் அவர்களின் சடலங்கள் ஜோகூர் செனாய் விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்படவுள்ளதாக மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

படம்: நன்றி (The Star)