Home Featured நாடு கொள்ளைச் சம்பவத்தில் 26 வயதுப் பெண் கற்பழிப்பு – பெட்டாலிங் ஜெயாவில் பயங்கரம்!

கொள்ளைச் சம்பவத்தில் 26 வயதுப் பெண் கற்பழிப்பு – பெட்டாலிங் ஜெயாவில் பயங்கரம்!

629
0
SHARE
Ad

 

Malaysian women rapedஷா ஆலம் – பெட்டாலிங் ஜெயாவில் வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள், அவ்வீட்டில் இருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்ததோடு, 26 வயது பெண்ணையும் கற்பழித்துச் சென்றுள்ளனர்.

இதைத் தடுக்க வந்த அப்பெண்ணின் தம்பியை கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜாலான் காசிங்கில், காலை உணவை முடித்துவிட்டு வெளியே கிளம்பிய அப்பெண்ணையும், அவரது தம்பியையும், வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இரண்டு கொள்ளையர்கள் வீட்டின் முன்பு காரில் இருக்க, மற்ற இருவர் வீட்டிற்குள் நுழைந்து அவர்களிடம் பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

அப்போது கொள்ளையன் ஒருவன் அப்பெண்ணை அறை ஒன்றிற்கு இழுத்துச் சென்று கற்பழித்துள்ளான். அதைத் தடுக்க வந்த தம்பியை மற்றொரு கொள்ளையன் கத்தியால் வெட்டியுள்ளான்.

சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறையின் தலைமை துணை ஆணையர் டத்தோ மொகமட் அட்னான் அப்துல்லாவும் இந்தச் சம்பவத்தை நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொள்ளையர்களை அடையாளம் காணம் தற்போது அண்டை வீடுகளிலுள்ள இரகசிய கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.