Home Featured இந்தியா பெங்களூர் பள்ளியில் மேலும் ஒரு சிறுத்தை – அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

பெங்களூர் பள்ளியில் மேலும் ஒரு சிறுத்தை – அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!

720
0
SHARE
Ad

Tigerபெங்களூரு – கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூரில், தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது.

பின்னர், அதை வனத்துறையினர் 14 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர். இந்த நடவடிக்கையின் போது 3 பேர் சிறுத்தை தாக்கி காயமடைந்தனர்.

இந்நிலையில், அதே பள்ளியில் மேலும் ஒரு சிறுத்தையை நேற்று இரவு பார்த்ததாக சிலர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் இன்று அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கண்காணிப்பு கேமரா மூலம் அதன் நடமாட்டத்தைக் கண்டறிந்து பிடிக்கும் நடவடிக்கையில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கதவு, ஜன்னல் ஆகியற்றை பூட்டி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.