Home Featured நாடு 1.5 மில்லியன் தொழிலாளர்களை வரவழைப்பது சரியான முடிவு தான் – சாஹிட் விளக்கம்!

1.5 மில்லியன் தொழிலாளர்களை வரவழைப்பது சரியான முடிவு தான் – சாஹிட் விளக்கம்!

789
0
SHARE
Ad

zahidபுத்ராஜெயா – உள்ளூர் தொழிலாளர்களுக்கு தான் முன்னுரிமை என்ற போதிலும், 1.5 மில்லியன் வங்க தேசத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முடிவு சரியானதே என்கிறார் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி.

உற்பத்தி மற்றும் தொழில்துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்து வருகின்றது என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

“தேவைக்கு ஏற்ப அளிப்பது (மனிதவளம்) எமது கடமை. என்றாலும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு தான் அரசாங்கம் முன்னுரிமை வழங்கும்” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சாஹிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், 1.5 மில்லியன் தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் மலேசியாவிற்குக் கொண்டு வரப் போவதில்லை. அவர்கள் மூன்றாண்டுகளில் தான் அழைத்துவரப்படவுள்ளார்கள் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக வரும் 18-ம் தேதி, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்டு ரியாட், தாகா செல்கிறார் என்றும், அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னரே அனைத்தும் நடக்கும் என்றும் சாஹிட் விளக்கமளித்துள்ளார்.