இந்நிலையில், அச்சிறுத்தை மீண்டும் கூண்டில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக இன்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று பிப்ரவரி 14-ம் தேதி இரவு உணவு கொடுப்பதற்காக அதன் பராமரிப்பாளர் கூண்டைத் திறந்த போது அது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பூங்கா நிர்வாக இயக்குநர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிடும் சந்தோஷ், அது இன்னும் பூங்கா வளாகத்திற்குள் தான் இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கதவு சரியாக மூடாடதால், சிறுத்தை தப்பிச் சென்றிருக்கலாம் என்றும், அது இயற்கை தான் என்றும் சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.