Home Featured நாடு “நான் கைதாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்” – மகாதீர் கூறுகின்றார்!

“நான் கைதாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்” – மகாதீர் கூறுகின்றார்!

633
0
SHARE
Ad

 

Former Malaysian Prime Minister Mahathir bin Mohamad, 88-year-old, speaks during the 20th International Conference on The Future of Asia in Tokyo, Japan, 22 May 2014. The two-day annual forum, hosted by Nikkei Inc., aims to bring together political and economic leaders from Asia-Pacific nations to discuss the future and development of the region. The forum is held from 22-23 May.கோலாலம்பூர் – தான் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பலர் விரும்புவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் நம்புகின்றார்.

இது குறித்து இன்று அவர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வாறு செய்து கொண்டிருப்பதாக புதிய விளம்பரப் பிரிவுத் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார். நான் கைதாக வேண்டும் என்ற அவர்களது விருப்பம் அவரது எச்சரிக்கை மூலம் தெளிவாகத் தெரிகின்றது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், மகாதீர் அவதூறுகளைப் பரப்பி வருவதாக அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான தனது போராட்டத்தில் மேலும் ஆதரவாளர்கள் பெருகுவார்கள் என்று மகாதீர் நினைப்பதாகவும் அனுவார் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மகாதீரின் அண்மைய வலைப்பதிவிற்கு எதிராகப் பல புகார்கள் எழுந்தன. அப்புகார்களின் அடிப்படையில் தற்போது காவல்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.