Home Featured நாடு இளைஞர்கள் மஇகாவுக்கு வர வேண்டும்: டாக்டர் சுப்ரமணியம் அழைப்பு

இளைஞர்கள் மஇகாவுக்கு வர வேண்டும்: டாக்டர் சுப்ரமணியம் அழைப்பு

913
0
SHARE
Ad

கங்கார்- இளைய தலைமுறையினர், குறிப்பாக அதிகம் படித்தவர்கள் மஇகா நடவடிக்கைகளில் துடிப்புடன் பங்கேற்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்புகளும் புரிதலும் மேலும் வலுவாகும் என்றார் அவர்.

Dr-S-Subramaniam“இதன் காரணமாகவே நாடு முழுவதும் புதிதாக 500 மஇகா கிளைகளைத் தொடங்க பரிந்துரை செய்துள்ளோம். நன்கு தேர்ச்சி பெற்ற, திறமை வாய்ந்த இளைஞர்களைக் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம். அதே வேளையில் நாடு முழுவதும் அனைத்து நிலைகளிலும் உள்ள இந்தியர்களை கட்சித் தலைவர்கள் சந்திப்பதற்கான நிகழ்வுகளையும் நாங்கள் நடத்தி வருகிறோம்” என்று பெர்லிசில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவை தொடக்கி வைத்தபோது டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

இளைஞர்களின் ஈடுபாடும் புத்தாக்க சிந்தனைகளும் இருக்கும்போது கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்றார் அவர்.

#TamilSchoolmychoice

“இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்திய சமுதாயத்திடமிருந்து கிடைத்துள்ள வரவேற்பு நன்றாக உள்ளது. கட்சி ஏற்பாடு செய்த நிகழ்வுகளுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு இதைக் கணிக்க முடிகிறது. இளையர்கள் பங்கேற்கக் கூடிய நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்வோம்,” என்றார் டாக்டர் சுப்ரமணியம்.